இணைய வழி கற்பித்தலில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் சில ஆசிரியர்கள் அதிக பணம் பெறுவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு

144 0

இணைய வழி கற்பித்தலில் மேலதிக வகுப்புகளை நடத்தும் சில ஆசிரியர்கள் இந்த நாட்களில் அதிக பணம் பெறுவதனால் பல்வேறு சிரமங் களை எதிர்கொண்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

பாடசாலை மூடப்பட்டுள்ள இந்த காலத்தில், அதிபர் – ஆசிரியர் இணைய வழி கற்பித்தலை இடைநிறுத்தியுள் ளனர் என்றும் சில ஆசிரி யர்கள் இணைய வழி கற்பித்தலில் மேலதிக வகுப்புகளுக்காக அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மேலதிக வகுப்புகளை நடத்தும் சில ஆசிரியர்கள் புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான வகுப்புகளை நடத்துவதாகவும் ஒரு சில ஆசிரியர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஒரு பாடத்திற்கு வெவ்வேறு கட்டணம் வசூலிப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தரத்திற்காக மேலதிக வகுப்புகள் நடத்தும் சில ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகள் உரிய திகதியில் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மேலதிக கற்பித்தல் நடவடிக்கை யைத் தவிர்ப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்வதாகவும், இந்தச் சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் செலவழித்துக் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்வதனால் அதிக சிரமத்திற்குள்ளாகி யுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாகப் பாடசாலைகள் மூடப்பட்ட காலத்தில் அதிபர் – ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் இணையவழி கற்பித்தலை நிறுத்தியுள்ளதாகவும், சில ஆசிரியர்கள் அதிக பணத்தை அறவிடுவதாகவும் இது தங்கள் பிள்ளைகளுக்கும் தங்களுக்கும் இழைக்கப்படும் மிகப் பெரும் அநீதியாகும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.