அரசாங்கத்தின் முடிவுகளால் தேயிலை செய்கை அழியும் ஆபத்தில் உள்ளது – சஜித் பிரேமதாச

168 0

உரம் தொடர்பில் தெளிவான புரிதல் இல்லாமல் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டில் தேயிலை செய்கை அழியும் அபாயத்தில் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காலி பத்தேகமவில் தேயிலை செய்கையாளர்களுடன் உரையாற்றும் போது, தேயிலை உற்பத்தி 50 % ஆக குறைந்துள்ளதாக சிறிய அளவிலான தேயிலை தோட்ட உரிமையாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் அங்கீகாரம் பெற்று, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கும் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களின் துயரங்களைக் கேட்பது வருத்தமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நடைமுறையிலுள்ள அனைத்து தரப்பினரும் நிலவும் நெருக்கடியால், பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.