அனுபவமற்ற தலைவரால் இன்று முழு நாடும் சீரழிந்துள்ளது- கயந்த கருணாதிலக

157 0

அனுபவமற்ற தலைவர் ஆட்சிக்கு வந்ததன் மூலம் இன்று முழு நாடும் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அஹுங்கல்லாவில் உள்ள பொத்ஹது பகுதியிலுள்ள கந்த பகுதியில் கறுவாப் பட்டை விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எந்த அரசாங்கமும் செயற்படாத முறையில் தொலைநோக்கு அற்ற மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை எடுத்த அரசாங்கம் இந்த அரசாங்கம் என வரலாற்றில் பதியப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மரங்களிலிருந்து காய் வருவது போன்று இரசாயன உரங்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், ​​நெல் விவசாயிகள் மட்டுமல்லாது கறுவாப்பட்டை மற்றும் தேயிலை விவசாயிகளும் மிகவும் இயலாதவர்களாகி விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம் செய்ய இரசாயன உரங்களைக் கேட்டு இன்று நாடு முழுவதும் விவசாயி கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் ஒரு வருட காலம் உரம் போட முடியாததால் நாட்டிற்கு வருமானம் தந்த கறுவாப்பட்டை செய்கை அழிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுபவமற்ற மற்றும் திறமையற்ற தலைவர் ஆட்சிக்கு வந்தமையால் நாடு பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.