நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலினிடம், உங்களுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலினிடம், உங்களுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் உடல்நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதிகாலை வேளையில் சைக்கிளிங் செல்வது, நடைபயிற்சி செய்வது என்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவருடைய பேச்சை மு.க.ஸ்டாலின் பவ்யமாக கேட்டுக் கொண்டு வணங்கியபடி நடைபயிற்சியை தொடர்ந்தார்.
வழியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவர், ‘உங்களை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இதே மாதிரி எப்பவும் இருங்கள். உங்கள் சேவை நல்லபடியாக இருக்கிறது.’ என்று மனதார பாராட்டினார். அதற்கு மு.க.ஸ்டாலின் சிரித்தபடி கட்டாயம் என்று கூறினார்.
இதே போன்று நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலினிடம், உங்களுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அதற்கு நன்றி என்று சிரித்த முகத்துடன் கூறியபடி நடைபயிற்சியை தொடர்ந்தார்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தாலும் தங்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சகஜமாக பேசி வருவதை நினைத்து மக்கள் மனம் மகிழ்கின்றனர்.

