உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பில் கவலை தெரிவித்தனர் என்றார்.
இந்த அசெளகரியத்தை தவிர்ப்பதற்காக, அனைத்து வங்கிகளுக்கும் அந்த நிதியை வெளியிடுமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அவை மத்திய வங்கிக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

