அரசிலுள்ள வர்த்தக, விவசாய அமைச்சர்கள் இப்போதே இராஜினாமா செய்ய வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

468 0

அரசாங்கத்திலுள்ள வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்கள் இப்போதே இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அதன் பிறகு, கட்டுப்பாட்டை பிரபல வர்த்தகரும் நெல் ஆலை உரிமையாளருமான டட்லி சிறிசேன உள்ளிட்ட ஏனைய வர்த்தகர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

அரிசி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படாது என்றும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாவிற்கு மேல் விலை அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருந்த நிலையில் அந்தக் கதைகள் அனைத்தையும் புஷ்வாணமாகி வியாபாரிகளே விலையை நிர்ணயித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருக்கும் அரசாங்கத்தினால், அரிசி வியாபாரிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதீத அதிகாரம் கொண்ட அரசாங்கம் கடைசியில் வியாபாரிகள் முன் மண்டியிட்டுள்ள தாகவும் தற்போது அனைவரும் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.