தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை

205 0

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தஅடிப்படையற்ற தகவல்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத்தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.