அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது – லசந்த அழகியவன்ன

138 0

அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன, அரிசி ஆலை உரிமையாளர்கள் சுதந்திரத்தை சுரண்டினால் அரசாங்கம் நேரடியாக தலையிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரிசி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவோடு அரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்று அரிசிக்கு புதிய விலையை அறிவித்தனர்.

நுகர்வோரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஏதேனும் அநியாயம் நடந்தால், அரசாங்கமும் நுகர்வோர் விவகார அதிகாரசபையும் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்.

அமைச்சரவை முடிவின் அடிப்படையில் வர்த்தக அமைச்சின் தலையீட்டின் மூலம் 100,000 மெட்ரித்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், இது மலிவு விலையில் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.