தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 333 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் என்றும் 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவும் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 79, 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் பயணித்த 1877 பேரும் 1149 வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 251 பேரும் அவர்கள் பயணித்த வாகனங்களும் திருப்பி அனுப்பட்டதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர்.

