நவம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கப்படும்!

236 0

நவம்பர் மாதத்திற்குள் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர். சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

தடுப்பூசி நடவடிக்கைகளை தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2020 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.