தியவன்ன ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் படலம் தொடர்பான விசாரணை அறிக்கை சுற்றுச்சூழல் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புத்கமுவ கால்வாயில் நீண்ட காலமாக கழிவுகள் அகற்றப்பட்டு, கால்வாயின் நீர் ஓட்டம் தடைபட்டதால், பாசி அல்லது பாக்டீரியா வளர்ந்ததன் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த எண்ணெய் படலம் தொடர்பில் அமைச்சருக்கு கிடைத்த நிழற்படங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

