நெல்லை நியாயமான விலையில் விற்காவிட்டால் செயற்பாடுகளை நிறுத்த நேரிடும் – அரிசி ஆலை உரிமையாளர்கள்

226 0

அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் பயிரை நியாயமான விலையில் விற்க முடியாவிட்டால் நடவடிக்கைகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி மற்றும் சம்பா அரிசியை முறையே ரூபா 50 மற்றும் 52 ரூபாவிற்கும் கொள்வனவுச் செய்யவுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
இருப்பினும், விவசாயிகள் தங்கள் அறுவடையை சேமிப்பு அலகுகளுக்கு மாற்றுவதற்காக அதிக தொகையை செலவழிப்பதாகக் குறிப்பிடுகின்றனர், மேலும் தங்கள் அறுவடையை அதிக விலைக்கு கொள்வனவுச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.

மேற்குறித்த விடயத்தில் அரசாங்கம் அமைதியாக இருந்ததால், விவசாயிகள் தங்கள் அறுவடையை அரிசி ஆலைகளுக்கு அதிக விலைக்கு விற்கத் தொடங்கினர்.

இருப்பினும், அரிசி உற்பத்தியாளர்கள் அரிசியை கொள்வனவுச் செய்ய அதிக செலவு செய்ததால், குறைந்த விலையில் அரிசியை விற்க முடியாது என்று கூறுகின்றனர்.

சிறிய மற்றும் நடுத்தர அளவு திறன்களில் செயற்படும் அனைத்து ஆலையலர்களும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என இலங்கை அரிசி ஆலையலர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரிசியின் விலையை செயற்கையாகவும் அவசரகால நிலையிலும் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்தால், அரிசி விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.