ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஏற்பட்ட குழப்பத்தில் காயமடைந்த 21 பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றதை அடுத்து, ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அருகில் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதுடன், அந்த வலயத்திற்கு எதிப்பாளர்களால் கல்வீச்சு நடத்தப்பட்டது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

