வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை- விஜேதாச ராஜபக்ச

259 0

xnhfzjbவெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைக்க, நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு தாம் தயாராக இல்லை எனவும் இன்னமும் செயலணியின் அறிக்கையை தான் முழுமையாகப் படிக்கவில்லை எனவும் தெரிவித்த நீதி அமைச்சர், ஆனால்

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதில்லை என்ற தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு எமது பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை, அதனை நோக்கி தாம் செல்லப்போவதில்லை எனவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.