தமிழ் மொழிக் கற்கையினை நிறைவு செய்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

286 0

43மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில், தமிழ் மொழிக் கற்கையினை நிறைவு செய்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பிரதம பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எஸ்.செல்வராஜாவின் வழிகாட்டலின் கீழ், வடக்கு, கிழக்கு, மலையக பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் திறமை வாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில், தெரிவு செய்யப்படவர்களுக்கு தமிழ் எழுத்து மற்றும் பேச்சு பயிற்சிகள், மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து மாதகாலம் வழங்கப்பட்டன.

இதற்கமைய தமிழ் மொழிக்கற்கை நெறியினை நிறைவு செய்து வெளியேறிய 133 பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ரஹீம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எ.எஸ்.பி. திலின ஹேவா பத்திரன மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.