மைத்திரி தீர்மானத்தினால் மீள்குடியேற்றத்திற்கு தடையில்லை!

237 0

4வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் மேற்கொண்ட தீர்மானமானது போரில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றுவதில் எந்த தடையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வில்பத்து வன விலங்குகள் சரணாலயத்தை விரிவுபடுத்தி சரணாலயத்தை மீண்டும் வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி அண்மையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

வில்பத்து வனப்பகுதியில் எவரையும் குடியமர்த்தவோ எதிர்காலத்தில் குடியேற்றவோ எண்ணவில்லை என அமைச்சர் பதியூதீன் கூறியுள்ளார்.

போர்க்காலத்தில் வில்பத்துவுக்கு அருகில் இருக்கும் பிரதேசத்தில் வாழ்ந்து, பேரினால் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் அங்கு மீள்குடியேற்றும் போது சிலர் பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்ததால், அந்த இடங்கள் காடாக மாறியிருந்ததாகவும் மக்கள் முன்னர் வாழ்ந்த பகுதியிலேயே குடியேற்றப்படுவதாகவும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து சரணாலயம் தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்தினாலும் அரசாங்கத்தை விட்டு செல்ல போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.