ஈழத்து தமிழ் பெண் ஹம்சாயினி குணரத்தினம் நோர் வேயின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு

29 0

ஈழத்து தமிழ் பெண் ஹம்சாயினி குணரத்தினம் நோர் வேயின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹம்சாயினி குணரத்தினம் என்பவரே இவ்வாறு நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார். மூன்று வயதில் ஹம்சாயினி குணரத்தினம் நோர்வேக்கு தனது பெற்றோருடன் புலம்பெயர்ந்தமை தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி ஹம் சாயினி குணரத்தினம் ஒஸ்லோவின் பிரதி மேயராக நியமிக் கப்பட்டிருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் மீண்டும் அந்தப் பதவிக்கு தெரி வாகியினார். நேற்றைய தினம் இடம் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்சாயினி குணரத்தினம் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.