3,100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தெற்கு கடலில் கைதான வெளிநாட்டு படகிலிருந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின்போது நான்கு பாகிஸ்தான் பிரஜைள் உட்படஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று றுதியாகியுள்ளது.
காவல்துறை, கடற்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 1,370 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் குறித்த படகு கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

