விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும் சீனிக்கு தட்டுப்பாடு – மொத்த விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு

234 0

சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் விற்பனை செய்வதற்கான சீனி சந்தையில் இல்லை என மொத்த விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சீனி இறக்குமதியாளர்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீனி வழங்கப்படுவதனால் விற்பனை நடவடிக்கைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் போதுமான அளவு அரிசியும் கிடைப்பதில்லை என மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.