யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை மருத்துவ சேவை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை Non Invasive Ventilator மற்றும் பத்து Fingertip Pulseoxymeter களை அன்பளிப்பு செய்த அமெரிக்காவிலுள்ள சவேரிமுத்து குடும்ப அமைப்பினர்(Saverimuthu Family Foundation-USA) மேலும் ஒரு Hamilton C3 ICU ventilator,GE multiparameter monitor, Canon echocardiography probe ஆகிய மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
குறுகிய காலப்பகுதியில் இக் கொரோனா பெருந்தொற்று நேரத்திலும் தீவக மக்களின் சுகாதார மேம்பாட்டுக்கென இம்முறை 8.1 மில்லியன் ரூபா (81இலட்சம் ரூபா) பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இவ்வமைப்பினர் வழங்கியமை வைத்தியசாலை சமூகத்தாலும் பொதுமக்களாலும் பாராட்டப்பட்டுள்ளது.

