ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக ப்ரிமா நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பை குறித்த நிறுவனம் திருத்தவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த அதிகரிப்புக்கு ஆட்சேபனைகள் அதிகரித்து வருவதால், முந்தைய விலைகளில் பேக்கரிகளுக்கு மாவினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ப்ரிமா ஃப்ளோர் மில்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கோதுமை மாவின் அதிகபட்ச சில்லறை விலை 87 ரூபாவாகும்.

