பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

242 0

201701041038068349_magnitude-7-2-earthquake-strikes-off-coast-of-fiji_secvpfபிஜி தீவை இன்று அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சிறிது நேரத்துக்கு பின்னர் திரும்ப பெறப்பட்டது.

பசிபிக் பெருங்கடலின் தெற்கு கரையோரத்தில் சுமார் 300 தீவுகளை உள்ளடக்கிய பிஜி நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் தலைநகர் சுவாவில் இருந்து சுமார் 282 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.52 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் மூன்றரை மணி) பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்படாததையடுத்து, அந்த எச்சரிக்கை சிறிது நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 6.9 அலகுகளாக பதிவு செய்துள்ள நிலையில் இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.