தென்னாபிரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதித்தது?

267 0

தென்னாபிரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதித்தது என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி அலாவத்துல்லா இதனை தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தென்னாபிரிக்க வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தீவிரகலந்துரையாடலின் பின்னரே வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்து தீர்மானித்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் இந்தியாவில் பரவியவேளை இதேபோன்ற சம்பவம் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்தவேளை மத்தியகிழக்கிற்கு செல்லும் இந்தியர்கள் இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே இலங்கையில் டெல்டா வேகமாக பரவியது என தெரிவித்துள்ள அவர் தென்னாபிரிக்க வைரஸ் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பதை அரசாங்கம் செவிமடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.