தடுப்பூசி தொடர்பில் அதிகாரிகள் எடுத்த கண்மூடித்தனமான தீர்மானங்களே பொதுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள சுகாதார நெருக்கடிகளிற்கு காரணம் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
விஞ்ஞானரீதியிலான அடிப்படைகள் இன்றி தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பது குறித்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்றியதே அதன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கின்றனர் என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்த ஜயதிச தெரிவித்துள்ளார்.
மே 7 ம் திகதி சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியது அரசாங்கம் அதனை வழங்குவதை 8ம் திகதி ஆரம்பித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
60வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஜூன் மாதத்தில் அரசாங்கம் ஆரம்பித்து ஒரு மாதத்தில் பூர்த்திசெய்திருக்கவேண்டும் ன அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் 4500 உயிரிழப்புகள் ஏற்பட்டன இவர்களில் 3000க்கும் அதிகமானவர்கள் ஒரு டோஸ்கூட செலுத்திக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை என்ற தீர்மானத்தில் பாரதூரமான தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தவறான முடிவினால் ஆயிரக்கணக்கான முதியவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் பிசிஆர் அன்டிஜென் பரிசோதனைகளின் விலைகள் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார இது குறித்து பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனைகளிற்காக பொதுமக்கள் பெருமளவில் பணத்தினை செலவிடுகின்றனர் என தெரிவித்துள்ள அவர் இது குறித்து கொவிட் செயலணியின் பதில் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார்.

