ஜனாதிபதி யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம்! சிவாஜிலிங்கம்

273 0

sivajilinkamதமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எம்மிடம் உள்ள இறைமையினை கையளிக்கப் போகின்றோமா இல்லையா என்பதே கேள்வி.

மிகவும் நம்பிக்கைக்குரிய தலைமை. நம்பகத்தன்மையுடைய தலைமையாக தமிழ் தேசியகூட்டமைப்பு இருக்கின்ற காரணத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல்அமைப்பினை ஏற்றுக்கொள்ளப் போகின்றதா இல்லையா என்ற கேள்வி எழுகின்றது.

வடகிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம். சமஷ்டி அரசாங்கமாக இருக்க வேண்டுமென்ற தீர்ப்பினை வடகிழக்கு இணைப்பு எந்தவகையில் அமையப் போகின்றது.

வட கிழக்கினை தனித்தனிமாவட்டமாக ஏற்றுக்கொள்ளப் போகின்றோமா? வடகிழக்கினை இணைய விடாமல் செய்யும் சதிமுயற்சிக்கு துணை போக முடியாது இறுக்கமான முடிவுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும்.

 புதிய அரசியல் அமைப்பு வாக்கெடுப்பிற்கு வந்தால், 2:3 பெரும்பான்மையினைப் பெற்றுபுதிய அரசியல் அமைப்பினை நிறைவேற்ற முடியும்.

வாக்கெடுப்பின் மூலம் அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படுமாயின் தமிழ் மக்களின்விருப்பம் நிறைவேற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ் மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படவில்லையாயின் அரசியல் அமைப்பினைநிராகரிக்க வேண்டும். நாம் வெளியேற வேண்டுமென்று பலர் கோரிக்கை விடும் போது, புதியஅரசியல் அமைப்புக்கு சம்மதம் தெரிவிப்போமாக இருந்தால், முடிந்த கதை என்றார்.

அதன் பின்னர் எந்த முயற்சிகளையும் எடுக்க முடியாது. சர்வதேசத்தின் முன்னால் சென்றுதீர்வினையும் பெற முடியாது. அரைகுறை அற்ப சொற்ப அரசியல் அமைப்பினை மகாநாயக்கதேரர்களின் சம்மதத்தினை பெற்றுத்தான் கொண்டு வர வேண்டுமென்றால், ஜனாதிபதித்தேர்தலின் போது கூறியிருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணத்திற்கு வருவது தான் எதிர்ப்பில்லாத வருகையாக இருக்கமுடியும். அதன் பின்னர் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.

தமிழ் மக்களைஏமாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுமாயின் நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும்.புதிய அரசியல் அமைப்பு என்றால், தமிழ் மக்களின் விருப்பங்கள் உள்ளடக்கப்படவேண்டும். திருத்தமாயின் தற்போதுள்ள அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்யுமாறும்வலியுறுத்தினார்.

புதிய அரசியல் அமைப்பு என வரும் போது, வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் போன்றவிடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்றார்.

அரசாங்கம் ஒற்றையாட்சிக்குள் இருந்து இறங்கி வர வேண்டும். அரசாங்கம் இறங்கிவந்தால், நாங்களும் இறங்கி வருவோம்.எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்யாப்பில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் உள்ளடக்கப்படாவிடின் எதிர்த்து வாக்களிக்கவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.