மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரோனாவால் மரணம்!

237 0

மட்டக்களப்பு களுவங்கேனி மாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் ஒருவரின் அம்மம்மா கொரோனாவினால் இன்று (21) வீட்டில் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

82 வயதுடைய பெண் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை இடம் பெறுவதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.