நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் சட்டப்பூர்வமானது – சீனா

362 0

08-1428492303-china-flag-600இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் சட்டப்பூர்வமானது என சீனா தெரிவித்துள்ளது.
சீன இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யுஜூன், நேற்று பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை சர்வதேச நடைமுறைகளின் படியே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகை கப்பல் நடமாட்டம் நாடுகளுக்கு இடையேயான உறவுக்கும் பிராந்திய அமைதிக்குமு; உதவியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நடமாடுவதற்கான சுதந்திரம் உள்ளவரை சீனக் கடற்பரப்பில் இந்திய கப்பல்கள் நடமாடுவதற்கும் எந்த தடையும் இல்லை என இராணுவ தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.