நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்கு இணையாக, நாடு முழுவதும் தகனம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் நாளாந்தம் 100க்கும் மேற்பட்டோர்கள் மரணிப்பதாக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது என்றும் சகல பிரதான வைத்தியசாலைகளிலும் பிண அறைகளின் திறனைக் கடந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களைத் தகனம் செய்ய நாட்டில் தகனம் செய்வதற்கான திறனை மீறியுள்ளதாக ஊடக சந்திப்பில் இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொரள்ளை பிரதான கனத்தை மயானத்தில் நாள் ஒன்றுக்கு 20 சடலங்கள் மாத்திரம் தகனம் செய்யும் திறன் காணப்படுகின்றது.
குறித்த மயானம் 24 மணிநேரம் செயற்பட்டால் ஏராளமான சடலங்களைத் தகனம் செய்யலாம். ஆனால் கொழும்பை அண்மித்த வைத்தியசாலைகளில் 20க்கும் மேற்பட்ட சடலங்கள் காணப்படுகின்றன என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள அனைத்து குளிரூட்டிய பிண அறைகளிலும் இரு சடலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் பல இடங்களிலும் அங்கும் இங்கும் சடலங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான மத்திய நிலையங்களை அமைப்பது சரி , வைத்திய சாலைகளில் வாட்டுகளை அதிகரிப்பது சரி அதே போன்று சுடுகாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

