ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டது

252 0

ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று காரண மாக பஸ்யால பகுதியில் வைத்து குறித்த பேரணி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டவந்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள் அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது இதனை கருதிற்கொண்டு ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டதுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.