கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசியை போடவில்லை என்றால், தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இன்று கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் செலுத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இங்கு சென்று தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்

