இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு

410 0

201612311629346427_today-at-midnight-new-years-celebration-1200-police-in_secvpfஇன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி மாநகர போலீஸ் கமி‌ஷனர் உத்தரவின்பேரில் கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும்.கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாலைகளில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபவர்களை பிடிக்க மாநகரில் 22 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியில் சமூக ஆர்வலர்களும் ஈடுபட உள்ளனர்.மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விபத்தில்லா புத்தாண்டாக அமைய தேவையான விழிப்புணர் நடவடிக்கைகள் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று நட்சத்திர ஓட்டல்களில், கிளப்களில் நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நட்சத்திர ஓட்டல்களுக்கு வருபவர்களின் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மது விருந்து நடைபெற வேண்டும்,ஓட்டல்களில் கொண்டாட்டம் முடிந்து போதையில் இருப்பவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது, பெண்களை கேலி-கிண்டல் செய்ய கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மற்ற நகரங்களை விட சென்னையில் எப்போதும் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள். 12 மணி ஆனதும் கூச்சலிட்டும், உற்சாகமாக நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.அப்போது சிலர் போதையில் அத்துமீறலில் ஈடுபடுவது, மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்து வேகமாக செல்வது போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

அதன்படி இன்று இரவு 9 மணிக்கு மேல் மெரீனாவில் காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறுபவர்களையும், போதையில் ரகளை செய்பவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

மெரீனா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பார்கள்.கொண்டாட்டத்தின் போது கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்க குதிரை படை வீரர்கள் ரோந்து வருவார்கள்.

சென்னை நகரம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஓட்டல், கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணை கமி‌ஷனர்கள் அன்பு, மனோகரன் ஆகியோர் பரிந்துரைகள் குறித்து பேசினர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஓட்டல் ஒன்றில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்து பலியான சம்பவம் நடந்தது. அதுபோன்று அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் 25 கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அவை வருமாறு:-

* நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிளப், ரிசார்ட்டுகளில் நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு  கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

* நட்சத்திர ஓட்டல், பார்களுக்கு வருபவர்களின் வாகன எண்களை பதிவு செய்ய வேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மது விருந்து நடத்த வேண்டும்.

* நடன நிகழ்ச்சியின் போது மது விருந்துக்கு தடை.

* நீச்சல் குளங்களில் மேடை அமைக்கக் கூடாது.

* நீச்சல் குளங்களை இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடி வைக்க வேண்டும்.

* கேளிக்கை நிகழ்ச்சிக்கு மேடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

* கொண்டாட்டத்துக்கு வரும் வெளிநாட்டினரிடம் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என சோதிக்க வேண்டும்.

* ஓட்டல்களில் கொண்டாட்டம் முடிந்து போதையில் இருப்பவர்களை கார் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்