வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

208 0

அனைத்து அரச சேவையாளர்களையும் கடமைக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இன்று (05) காலை 7 மணிமுதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.