இந்த புதுவருடத்தில் ஒரு நொடி அதிகம்

396 0

happynewyear2008உலக வாழ் பல்லின மக்களும் இன்று புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

புதுவருடத்தினை இலங்கை உள்ளிட்ட உலக வாழ் மக்கள் மிக கோளாகலமாக வான வேடிக்கைகளுடன் வரவேற்றனர்.

மலர்திருக்கும் புதிய புத்தாண்டானது ஒரு வினாடி காலப்பகுதியினை அதிகம் பெற்ற வருடமாக அமைந்துள்ளது.

வருடத்தின் முதல் நாளை ஆங்கிலேயர் முறைப்படி அனைவரும் புதுவருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர்.

புது வருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆலங்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களில் உள்ளிட்ட மத வாழிப்பாட்டு தளங்களில் முக்கிய சமய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

உதயமாகியுள்ள புதுவருடம்; வறுமையை ஒழித்து, சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஏற்ற வருடமாக அனைவருக்கம் அமைய வேண்டும் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையான பொருளாதாரம், நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமான சமூகம் என்பன மலர்திருக்கும் புது வருடத்தில் உருவாக வேண்டும் என பிரதமர் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கும் புதுவருடத்தில் தமது நிலைப்பாட்டில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுவதை தாம் நம்புவதாகவும், பல கருமங்களை எதிர்கொள்ள பிறந்திருக்கும் புதுவருடத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் விடுத்துள்ள புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புது வருட பிறப்பை முன்னிட்டு பட்டாசு கொளுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

அத்துடன் மதுபோதையுடன் வாகன செலுத்துபவர்களை கைது செய்வதற்காக சிறப்பு காவற்துறை நடமாடும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.