ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக ஹிருணிகா ஏன் உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்?

236 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால், பயங்கரவாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு அல்லது நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரா கூறுகிறார்.

அத்துடன் தனது தந்தையின் கொலைதொடர்பாக தண்டனை பெற்ற ஏனைய மூன்று கைதிகளும் துமிந்த சில்வாவுடன் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

“நாட்டின் சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். சட்டம் மீறப்பட்டால், அதுஒரேவித மாகவேஇருக்கவேண்டும் ” என்று அவர்கூறுகிறார்

ஐக்கியமாக்கல் சக்தியி ன் மகளிர் பிரிவின் ர் ஹிருணி கா பிரேமச்சந்திர , ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் மூலம் பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார்.

எந்தவொரு நபருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையா என்று பிபிசி யால் கேட்கப்பட்டபோது , அத்தகைய அதிகாரம் இருந்தபோதிலும், சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்..

முன்னாள்பாராளு மன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்ம ன் பிரேமச்சந்திர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா “உட்பட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஜூன் 24 அன்று ஜனாதிபதி கோதபய ராஜபக்சவினால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.சில வாரங்களுக்குப் பிறகு, அவர் தேசிய வீடமைப்புஅதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்இது தொடர்பாக கேட்டிருந்த போதிலும் இதுவரை பதிலளிக்கபடவில்லை

“துமிந்த சில்வாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரேவிதமான குற்றச்சாட்டு கள் உள்ளன .. அவருக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது?அப்படியானால் இந்த மரணத்தை மறந்துவிட்டு மற்ற மூன்று பேருக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.”

கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்பாரத லக்ஷ்மனின் மகள் பிபிசி சிங்கள சேவைக்கு ஜனாதிபதி நீதித்துறை, சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் மன்னிப்பு வழங்குவது தொடர்பாக முறையான நடைமுறைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்களா என்பதை அறிய விரும்புவதாக கூறியுள்ளார்.. 20 வது திருத்தம் எல்லயற்றஅதிகாரத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

தனது முயற்சிகள் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதையும் ஹிருணிகா பிரேமச்சந்திர வலியுறுத்தி யுள்ளார்