இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆறு வருடங்களாக தமது சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.சி.பிரேமலால் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இடம்பெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் அதிகாரிகள் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கியுள்ளதாகவும், எனவே மீண்டும் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

