பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினருடன், சுற்றுலா சென்ற நிலையில், கடலில் நீராட சென்றபோது குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கியவரின் சடலத்தினை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தநிலையில் சடலம் இன்று காலை 6.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பாசிக்குடா அமயா சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரை பகுதியில் கரையொதுங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

