மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany)

241 0

என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் கால்சுறு (Karlsruhe) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021 அன்று 16:30 மணிக்கு அகவணக்கத்துடன் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமானது. அகவணக்கத்தை தொடர்ந்து செயற்பாட்டாளர் ஒருவரால் கறுப்பு யூலை தொடர்பாகவும் தமிழீழத்தை வென்றெடுக் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழர்கள் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டுமென உரையாற்றப்பட்டது.

கோவிட் 19 (Covid 19) காலக் கட்டத்திலும் பல தமிழ் மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் எமது இளைய தலைமுறையினரும் கலந்து கொண்டு வேற்றின மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விளக்கமளித்தும் தமது உணர்வுகளை வௌிப்படுத்தி நின்றது குறிப்பிடத்தற்கதாகும்.

காட்சிப்படுத்தல்களை வேற்றின மக்கள் பார்வையிட்டதோடு வாழிட மொழியில் ஒலிபரப்பாக்கப்பட்ட தமிழர்களின் வலிகளையும் உள்வாங்கினார்கள.

இறுதியாக 18:38 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டு வருகை தந்த தமிழுறவுகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து தமிரின் தாரக மந்திரத்துடன் உணர்வுப்பூர்வமாக கறுப்பு யூலை நிகழ்வு நிறைவடைந்தது.