திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இன்று மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையிலேயே மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

