தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்ளல்

302 0

tamil-daily-news-paper_22150385380தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்பவர் நடப்பு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தலுக்கோ, வேறு ஏதேனும் செயல்முறைக்கோ வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் கொடுக்கும் போது தற்காலிக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

மேலும் இலங்கையில் சுற்றுலா நுழைவுரிமைச்சீட்டின் படி இரண்டு மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருக்க திட்டமிட்டிருக்கும் ஒருவருக்கு உரிமம் தேவைப்படும் போது தற்காலிக ஓட்டுனர் உரிமம் தரப்படும்.

விண்ணப்பம் பெறுவதற்கான கட்டணம்: எந்தவொரு கட்டணமின்றி விண்ணப்ப படிவம் கொடுக்கப்படுகிறது.

உரிமம் பெறுவதற்கான கால அளவு-கட்டணம்

குறைந்தது ஒரு மாதம் – ரூ 600.00

குறைந்தது இரு மாதங்கள் – ரூ 1200.00

இதரக்கட்டணம்:

  • விண்ணப்பதாரர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறாமல் மறு விண்ணப்பத்திற்கு விண்ணப்பித்தால் ரூ100.00 செலுத்த வேண்டும். (மூன்று முறை மட்டுமே மறு விண்ணப்பம் செய்யலாம்.)
  • விண்ணப்பதாரர் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெறாமல் மறு விண்ணப்பத்திற்கு விண்ணப்பித்திருந்தால் அவர் முழு தொகையையும் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணம்

  • தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு
  • நாட்டின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் அங்கீகரித்து வழங்கப்பட்ட வெளிநாட்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் அதன் நிழற்பிரதி. உரிமம் ஆங்கிலத்தில் இல்லைடியனில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுப் பெறப்பட்ட அனுமதிப் பத்திரம்.
  • 2*2 ½” அளவில் உள்ள கருப்பு வெள்ளை இரண்டு நிறப்படங்கள்
  • இலங்கையில் தங்குவதற்கு வழங்கப்பட்ட நுழைவுரிமைச்சீட்டின் அசல் மற்றும் உண்மைப் பிரதி

சேவைக்கான படிமுறைகள்

படி1: விண்ணப்பதாரர் “C.M.T. 35” விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்.

மாவட்ட செயலக அலுவலகம் (சாதாரணச் சேவை)

தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை – முன்னுரிமைப்படி)

படி 2: விண்ணப்பதாரர் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களோடு சேர்த்து உதவி ஆணையாளரிடம் சமர்பிக்க வேண்டும்.

மாவட்ட செயலக அலுவலகம் (சாதாரண சேவை)

தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை – முன்னுரிமைப்படி)

படி 3: திணைக்களத்தால் அழைக்கப்பட்ட பிறகு விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும்.

படி 4: திணைக்களத்தால் அழைக்கப்பட்ட பிறகு விண்ணப்பதாரர் செயல்முறைத் தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் 6 மாதத்திற்கு செல்லுப்படியாகும்.

படி 5: திணைக்களத்தால் தற்காலிக உரிமம் விநியோகம் செய்யப்படும். இது 6 மாதத்திற்கு செல்லுப்படியாகும்.(செயல்முறைத் தேர்வு தேர்ச்சி பெற்ற உடன்).