பண்டாரகம நகரில் கொள்ளையிட்ட இருவர் கைது

397 0

586535574arrestபண்டாரகம நகரில் பெண் ஒருவரிடம் இருந்து 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் கொள்ளையிட பயன்படுத்திய கார் தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 22ஆம் திகதி குறித்த பெண் தன் கணவருடன் பாணந்துறைக்குச் சென்று கொண்டிருந்த போது, சந்தேகநபர்கள் இருவரும் காரில் வருகை தந்து தம்பதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

பின்னர்,குறித்த பெண்ணிடம் இருந்த பணப் பையை பறித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நுகேகொட மற்றும் பிலியந்தலை பகுதியை சேர்ந்த சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.