பத்தேகமயில் இருவருக்கு டெல்டா தொற்று!

266 0

பத்தேகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நயாபாமுல மற்றும் திலகஉதாகம ஆகிய கிராமங்களில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த 40 வயதுடைய ஆண், பெண் இருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவர், ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் என்றும், அவருக்கும் அவர்களது இரு பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட தொற்றின் அறிகுறிகளில் வித்தியாசம் காணப்பட்டதால் அவரது பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.