மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

270 0

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கறுப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மௌன கவனயீர்ப்பு போராட்டம் இன்று (23) காலை 9.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றது

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மதத்தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த மௌன கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாயினை கருப்பு துணியால் கட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.