இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா!

244 0

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 291,298 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 264,755 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை  3,959 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.