இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

250 0

நாரம்மல பகுதியில் 8,350,000 ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேகநபரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 805 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 30 கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை 4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் அட்டியடியவில் 32 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.