பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்றபோர்வையில், நிதியை அறவிடும் பல்கலைக்கழகம்-சம்பிக்க ரணவக்க

252 0

பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்றபோர்வையில், நிதியை அறவிடும் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கும் திட்டமே அரசாங்கத்திடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் பாதுகாப்புத்தரப்பினருக்கு மாத்திரமல்லாது, சாதாரண மாணவர்களும் பணம் செலுத்தி கற்கக்கூடிய பல்கலைக்கழகமாக உருவாக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இணையாகப் பாடசாலைக் கட்டமைப்பும், வேறு நிறுவனக் கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாகவும், பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்றபோர்வையில், நிதி அறிவிடும் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கும் திட்டமே அரசாங்கத்திடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.