மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கைதுக்கு எதிர்ப்பு

317 0

sanjeewaஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கம் மற்றும் முற்போக்கு சோசலிச கட்சி ஆகியன தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்ட போரணி நடத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள லஹிரு வீரசேகரவை விடுதலைசெய்யுமாறு முற்போக்கு சோசலிச கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் புபுது ஜெயகொட வலியுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான ஒடுக்கு முறைகளை தமது கட்சி எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்மையானது மாணவர்களை ஒடுக்கு முறைக்கு உட்படுத்துவதன் உச்சக்கட்டம் என ஆசிரியர் சேவையாளர் சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.