இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

250 0

dengue-mosquito-720x4802016ஆம் ஆண்டு இலங்கையில் 50 ஆயிரத்து 519 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் அதிகபட்சமாக கொழும்பில் 15 ஆயிரத்து 421 டெங்கு நோயாளர்களும், குறைந்தபட்சமாக கிளிநொச்சியில் 78 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டில் 29 ஆயிரத்து 777 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டனர்.

இவர்களுள் மேல் மாகாணத்தில் 15 ஆயிரத்து 582 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 881 பேரும், குறைந்தபட்சமாக அம்பாறை மாவட்டத்தில் 67 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2014ஆம்  ஆண்டில் 47 ஆயிரத்து 502 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.