இலங்கைத் தொழிலாளர்களை விரட்டியடித்த சீன நிறுவனம்

253 0

625-256-560-350-160-300-053-800-461-160-90மொரகஹகந்த, களு கங்கை நீர்த்தேக்க திட்டத்தில் பணியாற்றிய 150 பேர் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளதாக சீன ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொரகஹகந்த நீர்தேகத்திற்கு 8 கிலோமீற்றர் தூரத்தில் களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படுகின்றது. 45 வீதமான வேலை நிறைவடைந்துள்ள நிலையில், எவ்வித அறிவிப்பும் இன்றி தம்மை நீக்கியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைத்தளத்தில் கிட்டத்தட்ட 600 ஊழியர்கள் வேலை செய்கின்ற நிலையில், அவர்களில் அதிகமானோர் சீன நாட்டவர்களாகும். ஒரு ஊழியருக்கு தினசரி 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இன்று வேலை இழந்த அனைவரும் இலங்கையர்களாகும்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சீன நிறுவனத்தின் ஒப்பந்த அலுவலகத்திற்கு அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும் பொலிஸார் அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

பணம் இல்லாமையினால், ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.