கடந்த 10 ஆண்டில் இந்தியாவில் இதய, நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்பு

220 0

தொற்று நோய்களுக்கான மருந்து விற்பனை ரூ.18 ஆயிரம் கோடியாகவும். இரைப்பை குடல் சிகிச்சைக்கான மருந்து விற்பனை ரூ.17 கோடி ஆகவும், நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்து விற்பனை ரூ.16 கோடியாகவும் உள்ளது

இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக  நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மற்ற நோய்களை விட இதயம் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மருந்துகள் வி

1991-ம் ஆண்டில் மருந்து விற்பனையில் முதல் 5 இடங்களில் இதய கோளாறு சிகிச்சைக்கான மருந்து இடம் பெறவில்லை. அப்போது தொற்று நோய்கள், வைட்டமின் குறைபாடு, இரைப்பை குடல், சுவாச கோளாறு, வலி நிவாரணி ஆகிய சிகிச்சைகளுக்கான மருந்து விற்பனையே அதிகமாக இருந்தது. அதன் பின் 2011-ம் ஆண்டு இதய கோளாறு சிகிச்சை மருந்துகள் விற்பனை (ரூ.7,274 கோடி) 2-வது இடத்தில் இருந்தது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் இதய சிகிச்சை மருந்து விற்பனை 3 மடங்கு அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் இதய கோளாறால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டுகளில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் விற்பனை குறைவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது அந்த மருந்து விற்பனை 4-வது இடத்தில் உள்ளது. இதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.

ற்பனையில் முதல் 5 நோய்களில் இதய கோளாறு முதல் இடத்தில் உள்ளது. தற்போது ஆண்டுக்கு இதய கோளாறு சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை ரூ.21 ஆயிரம் கோடியாக உள்ளது. அதேபோல் தொற்று நோய்களுக்கான மருந்து விற்பனை ரூ.18 ஆயிரம் கோடியாகவும். இரைப்பை குடல் சிகிச்சைக்கான மருந்து விற்பனை ரூ.17 கோடி ஆகவும், நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்து விற்பனை ரூ.16 கோடியாகவும் உள்ளது.