ஒரே நேரத்தில் 90 வயது மூதாட்டியை பாதித்த ஆல்ஃபா, பீட்டா கொரோனா வைரஸ்

212 0

பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டிக்கு ஒரே நேரத்தில் இரு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை பெரும்பாலான நாடுகளில் கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென வைரஸ் உருமாற்றம் அடைந்து மிகத் தீவிரமாக பரவத் தொடங்கியது. இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்லா வைரஸ் மிகத்தீவிர தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உருமாறிய கொரோனாவிற்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர், உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோமா? என்பதை அறிவதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் ஆல்பா, பீட்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இரண்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆல்பா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. பீட்டா தென்ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்டது.
இரண்டு வைரஸும் பெல்ஜியத்தில் பரவிய நிலையில், இரண்டு வெவ்வேறு நபர்களிடம் இருந்து அந்த பெண்ணிக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம். ஆனால், எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை என மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் இதுபோன்று மற்ற யாரும் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.